ஜோஷி லா கணவாயை 68 நாட்களுக்குப் பிறகு எல்லை சாலைகள் அமைப்பு திறந்துள்ளது.

ஹிமாலயா பகுதியில் உள்ள ஜோஷி லா கணவாயை மார்ச் 16, 2023 அன்று எல்லை சாலைகள் அமைப்பு திறந்தது. லடாக், ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே நுழைவாயிலாக உள்ள 11,650 அடி உயரமான இடத்தில் அமைந்துள்ள இக்கணவாய் பனிக்கட்டிகள் அகற்றும் பணிகளுக்காக ஜனவரி 6, 2023 அன்று மூடப்பட்டது. அதன் பிறகு 68 நாட்களுக்கு பின், இன்று இது திறக்கப்பட்டது. இதே காரணத்திற்காக கடந்த ஆண்டு 73 நாட்கள் இக்கணவாய் மூடப்பட்டு இருந்தது.

2023-ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து பனிக்கட்டிகள் அகற்றும் பணி நடைபெற்றது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply