இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் சுகாதாரப் பணியாளர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக சுகாதார பணியாளர்கள் அனைவரும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பிரதமர்.திரு. நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். தேசிய தடுப்பூசி தினத்தில், மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதில் உள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். 

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“இந்தியாவை ஆரோக்கியமாக வைத்திருக்க நமது சுகாதாரப் பணியாளர்கள் அனைவரின் முயற்சிகளுக்கும் பாராட்டுகள்.

தேசிய தடுப்பூசி தினத்தில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் நினைவுகூர்வோம். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும் நமது அர்ப்பணிப்பை தொடர்ந்து மேற்கொள்வோம்”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply