கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவு கணிசமாக அதிகரித்து மும்மடங்காக உயர்ந்துள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். 2007-08ம் ஆண்டில் ரூ.39,437.77 கோடியாக இருந்த இந்த தொகை 2017-18ம் ஆண்டில் ரூ.1,13,825.03 கோடியாக உயர்ந்துள்ளது என அண்மையில் கிடைத்துள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டை பொறுத்தவரை உலகளவில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் டாக்டர். ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார். ஆராய்ச்சியாளர்களுக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கும் வகையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செலவினத்தை உயர்த்த அரசு உண்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார். ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது பிஎச்டி மற்றும் முதுநிலை ஆராய்ச்சிகளை தொடரும் வகையில் வாய்ப்புகளை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திவாஹர்