சர்வதேச அளவிலான சுகாதாரக் காப்பீட்டை கடைசி குடிமகனுக்கும் எடுத்துச் செல்ல டிஜிட்டல் சுகாதாரம் குறித்த 2 நாள் சர்வதேச மாநாட்டிற்கு டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை தாங்குவார்.

ஜி-20 அமைப்பில் இந்தியாவின் தலைமையைப் பயன்படுத்தி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தென்-கிழக்கு ஆசிய உலக சுகாதார அமைப்புடன் இணைந்து சர்வதேச சுகாதார பாதுகாப்பைக் கடைசி குடிமகனுக்கும் எடுத்துச் செல்வதற்கான டிஜிட்டல் சுகாதாரம் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை புது தில்லியில் வரும்  20, 21 தேதிகளில் ஏற்பாடு செய்துள்ளன.  மத்திய சுகாதாரம், குடும்ப நலன், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர்.மன்சுக் மாண்டவியா இந்த மாநாட்டிற்குத் தலைமை தாங்குகிறார்.  மத்திய சுகாதாரச் செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு.லாவ் அகர்வால் மற்றும் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இந்த மாநாட்டில் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பாதுகாப்பான, நம்பகமான, அனைவருக்கும் சமமான மற்றும் நிலையான வழியில் டிஜிட்டல் சுகாதார தீர்வுகளை வழங்குதல் மற்றும் பகிர்ந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டு வருவது குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது. வெளிப்படைத்தன்மை, அணுகல்தன்மை, தனியுரிமை, பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மை போன்ற கொள்கைகளைப் பின்பற்றி டிஜிட்டல் தொழில்நுட்பங்களை முதலீடு செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும் வழிகளை கண்டுபிடிப்பதில் மாநாடு கவனம் செலுத்தும். மக்கள்தொகை அளவில் டிஜிட்டல் ஆரோக்கியத்தை செயல்படுத்துவதற்கு தேவையான திட்டத்தை செயல்படுத்துபவர்களையும், தொழில்நுட்ப வல்லுநர்களையும் அடையாளம் காண இந்த மாநாடு உதவும்.

இந்த சர்வதேச மாநாட்டின் ஒரு பகுதியாக, பின்வரும் அம்சங்களில் ஐந்து அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன:

டிஜிட்டல் ஆரோக்கியம் – சர்வதேச சுகாதார பாதுகாப்பின் கட்டாயம்

டிஜிட்டல் சுகாதார மக்கள் தொகை அளவு – திட்டத்தை செயல்படுத்துபவர்கள்

டிஜிட்டல் சுகாதார மக்கள் தொகை அளவு – தொழில்நுட்பத்தை செயல்படுத்துபவர்கள்

சர்வதேச சுகாதார பாதுகாப்பில் புதிய கண்டுபிடிப்புகள்

சர்வதேச சுகாதார பாதுகாப்பிற்கான டிஜிட்டல் தேவைகள்.

திவாஹர்

Leave a Reply