பிரதமர் நரேந்திர மோதி நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி அதன் பயனைப் பெற்று வருகின்றனர்.
நாட்டில் கூட்டுறவுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் இந்திய அரசின் அனைத்துத் திட்டங்களும் அனைவருக்கும் எளிதாக சென்றடையும்
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மூன்று தேசிய அளவிலான மாநில கூட்டுறவு சங்கங்களை நிறுவ முக்கிய முடிவை மேற்கொண்டுள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாநில கூட்டுறவு ஏற்றுமதி சங்கங்களின் மூலம் நாட்டின் எந்த கிராமத்திலும் உள்ள விவசாயி தனது விளைபொருட்களை உலக சந்தையில் எளிதாக விற்பனை செய்து தனது விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற முடியும்.
இயற்கை விவசாயம் மட்டுமே பூமியைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு அதை ஊக்குவிக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
திரு அமித் ஷா தனது உரையில், பல சிரமங்களுக்குப் பிறகு, ஜூனாகத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தற்போதைய வடிவம் உருவாகியுள்ளது என்றார். இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றார். சுதந்திரம் அடைந்ததில் இருந்து, கூட்டுறவுக்கான தனி அமைச்சகத்திற்கான கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்ததாகவும் நாட்டின் கூட்டுறவுத் துறையுடன் தொடர்புடைய மக்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி, கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார் என்றும் திரு அமித்ஷா கூறினார்.
திவாஹர்