நாட்டு நாட்டு திரைப்படப் பாடலை கொண்டாடிய ஜெர்மனி தூதரகத்திற்குப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியான நாட்டு நாட்டு திரைப்படப் பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ள நிலையில், இதனை ஜெர்மனி தூதரகம் கொண்டாடி வீடியோ வெளியிட்டியிருப்பதற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பூடானுக்கான ஜெர்மனி தூதர் டாக்டர் பிலிப் அக்கர்மென் மற்றும் அவரது தூதரக உறுப்பினர்கள் கொண்டாடிய வீடியோவை பதிவிட்டு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தில்லியில் பதிவு செய்யப்பட்டதாகும்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கான கொரிய தூதரகம் நாட்டு நாட்டு பாடலை கொண்டாடும் விதமாக வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி தூதருக்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் வண்ணங்கள் மற்றும் விருப்பங்கள்! ஜெர்மானியர்கள் நன்றாக நடனமாடினார்கள்!”.

திவாஹர்

Leave a Reply