மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஹிரா நகரில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய மக்கள் தர்பாரில் மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்தினார்.

2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகுமக்களின் வீட்டு வாசலில் அரசின் சேவைகளை கொண்டு வருவதும்வரிசையில் இருக்கும் கடைசி மனிதனும் அதில் பங்கு பெறுவதும் சாத்தியாமனது என்று மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கதுவா புறநகரிலுள்ள ஹிரா நகரில் நடைபெற்ற மக்கள் தர்பாரில் கலந்துகொண்ட ஜிதேந்திர சிங் இவ்வாறு கூறினார்.

மாவட்ட நிர்வாகத்துடனான மக்கள் தர்பார்‘ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங் மாவட்ட தலைமையகத்தில் மட்டும் ஆட்சியை நிர்வகிக்க முடியாது எனவும்,

மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்கும் வகையில் நேற்று ராம்நகரிலும்இன்று ஹிராநகரிலும்மக்கள் பிரச்சனைகள் நேரடியாகக் கேட்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் அதே இடத்தில் தீர்வு காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

முந்தைய அரசுகளில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள் இப்போது நாட்டிற்கே எடுத்துக்காட்டாக மாறியுள்ளதாகவும்எல்லை மாவட்டமான கதுவா இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக நூற்றுக்கணக்கான ஏக்கர் எல்லை நிலங்கள் சாகுபடிக்குக் கொண்டுவரப்பட்டுகதுவாவில் உள்ள மக்கள் முகத்தில் இழந்த புன்னகை கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்இது இந்த அரசால் மட்டுமே சாத்தியமாகும் எனவும் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

கதுவாவில் செய்யப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளைப் பட்டியலிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங்கதுவா இப்போது வட இந்தியாவின் முதல் உயிரி தொழில்நுட்பப் பூங்காவாகத் திகழ்வதாகக் கூறினார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாபூர்-கண்டி திட்டத்தின் மறுமலர்ச்சிவட இந்தியாவின் முதல் கேபிள்-தங்கும் பாலமான அடல் சேது,  டெல்லியிலிருந்து கதுவா வழியாக கத்ரா வரை வட இந்தியாவின் முதல் விரைவுச் சாலை,  லக்கன்பூர்-பானி-பசோலி- தோடாவிலிருந்து சட்டர்கலா சுரங்கப்பாதை வழியாக புதிய தேசிய நெடுஞ்சாலைமத்திய அரசின் நிதியுதவி பெறும் அரசு மருத்துவக் கல்லூரிமத்திய அரசின் நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்பட்டயக் கல்லூரிகள் போன்றவை கத்துவாவை நாட்டின் வளர்ச்சியின் சிகரமாக மாற்றியுள்ளதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply