குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மார்ச் 27 முதல் 28 வரை மேற்கு வங்கத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.
27ந்தேதி கொல்கத்தாவில் உள்ள நேதாஜி பவனுக்கு குடியரசுத் தலைவர் சென்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு மரியாதை செலுத்துவார். அதைத் தொடர்ந்து, அவர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூருக்கு அஞ்சலி செலுத்த அவரது இல்லமான ஜோராசங்கோ தாகுர்பாரி இல்லத்திற்குச் செல்கிறார். அன்றைய தினம் மாலை, கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் குடியரசு தலைவரைக் கவுரவிக்கும் விதமாக வழங்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார்.
வரும் 28ந்தேதியன்று, குடியரசுத் தலைவர் பேலூர் மடத்திற்குச் செல்வார். கொல்கத்தாவில் யூகோ வங்கியின் 80-ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழாவிலும் அவர் கலந்து கொள்கிறார். பின்னர், குடியரசுத் தலைவர் சாந்திநிகேதனுக்குச் செல்கிறார், அங்கு அவர் விஸ்வ-பாரதியின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வார்.
எஸ்.சதிஸ் சர்மா