தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா சங்கமம் (எஸ்டி சங்கமம்) பல நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே உருவான பிணைப்பை வலுப்படுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் விழாவின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் சேலத்தில் நடைபெற்ற தாண்டியா நடனத்தை குஜராத் மாநில அமைச்சர் திரு ஜகதீஷ் விஸ்வகர்மாவுடன் சாலை நிகழ்ச்சியில் கண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர்,
சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் குஜராத் மற்றும் தமிழ்நாடு இடையே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான பிணைப்பை வலுப்படுத்துகிறது.” என்று கூறியுள்ளார்.
திவாஹர்
*