ராகுல்காந்தி பதவி பறிப்பு விவகாரம்; நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்!

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பதவி பறிப்பு விவகாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ள்ளார். அதில் :

“ ராகுல் காந்தியின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் வரலாற்றில் கிரிமினல் அவதூறு வழக்கில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாவது வழக்கு இதுவாகும். ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து நீக்கும் ஆளும் கட்சியின் எண்ணம் இதில் தெளிவாகத் தெரிகிறது. எந்த அடிப்படையும் இல்லாமல் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது, கீழமை நீதிமன்றங்களில் அரசு தலையிடுவதை இது வெளிப்படுத்துகிறது. இந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை விவாதிக்க சபையின் மற்ற அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply