விவசாய கழிவுகளில் இருந்து நார் உற்பத்தி செய்து வர்த்தகம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தனியார் நிறுவனத்துடன் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் கையெழுத்து .

இரண்டாம் கட்ட தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கழிவுகளற்ற நகரத்தை உருவாக்கும் பிரதமரின் யோசனைக்கு இணங்க கழிவு மேலாண்மைத் துறையில் வர்த்தக நிலையில் உள்ள புதிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்கும் இந்திய நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் வரவேற்றுள்ளது. இந்திய நகரங்களில் கழிவு இல்லாத நிலையை ஏற்படுத்தும் அதே வேளையில் தொழில்நுட்ப உதவியுடன் கழிவுகளில் இருந்து வருமானத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முன்முயற்சியின் கீழ், முதல் ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் இன்று கையெழுத்திட்டது. தொழில்துறையில் பயன்படுத்தப்படும் சணல், ஆளி, தொட்டால் எரிச்சலூட்டும் தன்மை உள்ள தாவரம் போன்றவற்றின் விவசாய கழிவுகளிலிருந்து நார் உருவாக்கி அதனை வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தத்தில் புதுதில்லியில் உள்ள சாஹி ஃபாப் தனியார் நிறுவனத்துடன் இந்த வாரியம் ஒப்பந்தத்தில் கையெத்திட்டுள்ளது. திட்டத்தின் மொத்த மதிப்பீடான ரூ. 2.08 கோடியில், ரூ. 1.38 கோடியை அளிக்க வாரியம் முன் வந்துள்ளது.

இந்த நிகழ்வின் போது பேசிய தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக், சாமானிய மனிதரின் வாழ்வை மேம்படுத்தவும், எளிதானதாக மாற்றும் நோக்கத்துடனும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதுமையான தொழில்நுட்பங்களுக்கு உதவுவதில் வாரியம் முன்னோடியாக திகழ்வதாகக் குறிப்பிட்டார். பல்வேறு துறைகளில் ஏராளமான புத்தொழில் நிறுவனங்கள் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன் அவர்களது முயற்சிகளை நிறைவேற்ற நிதி உதவியை நாடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply