ஜி20 வேளாண் பிரதிநிதிகளின் இரண்டாவது கூட்டம் சண்டிகரில் தொடங்கியது .

ஜி20 வேளாண் பிரதிநிதிகளின் இரண்டாவது கூட்டம் சண்டிகரில் இன்று (2023 மார்ச் 29) தொடங்கியது.

தொடக்க நாள் நிகழ்ச்சியில்  வரவேற்புரையாற்றிய மத்திய அரசின் மூத்த பொருளாதார மற்றும் புள்ளியியல்  ஆலோசகர் திரு அருண் குமார், உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை தடுக்க ஆய்வுகளின் அடிப்படையிலான கொள்கைகள் வகுக்கப்பட  வேண்டும் என்று கூறினார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அபிலக்ஷ் லிகி பேசுகையில், நவீன பருவநிலை அணுகுமுறையுடன் நீடித்த வேளாண்மை, உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான வலுவான நம்பிக்கையை கட்டமைக்க வேண்டும் என்பதே ஜி20 வேளாண் கூட்டங்களின் முக்கிய நோக்கம் என்று குறிப்பிட்டார்.

31 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஜி20 உறுப்பு நாடுகள், சிறப்பு அழைப்பாளர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

திவாஹர்

Leave a Reply