ஜி20 வேளாண் பிரதிநிதிகளின் இரண்டாவது கூட்டத்தின் மூன்றாவது மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் சண்டிகரில் இன்று நடைபெற்றது.
முன்னதாக இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் ஜி20 பிரதிநிதிகள் விரிவான விவாதங்களை மேற்கொண்டனர். வரைவு செயல்திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக பல்வேறு அமர்வுகளில் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
மூன்றாவது நாளான இன்று, நடைபெற்ற கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை செயலாளர் திரு மனோஜ் அகுஜா, உணவு பாதுகாப்பு, ஊட்டசத்து, பருவ நிலைக்கேற்ற நவீன விவசாயம், உள்ளடக்கிய வேளாண் மதிப்பு சங்கிலி உள்ளிட்டவற்றில் வரிவான விவாதங்கள் நடத்தப்பட்டதாகவும், முக்கிய விசயங்களில் உடன்படிக்கை எட்ட இது உதவும் என்றும் கூறினார். இந்தக் கூட்டத்தில் ஜி20 நாடுகளைச் சேர்ந்த 85க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்
எஸ்.சதிஸ் சர்மா