பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி இதுவரை இல்லாத உயர்வை எட்டியதற்குப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.

2022-2023 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.15,920 கோடியை எட்டியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்கின் அறிவிப்புக்கு பதிலளித்து ட்வீட் செய்துள்ள பிரதமர், “அற்புதம்! இந்தியாவின் திறமை மற்றும் ‘மேக் இன் இந்தியா’ மீதான ஆர்வத்தின் தெளிவான வெளிப்பாடு. கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் நல்ல பலன்களை அளித்து வருவதை இது காட்டுகிறது. இந்தியாவை பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சிகளுக்கு எங்கள் அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply