2022 அக்டோபர் – டிசம்பர் மாத காலாண்டுக்கான பொதுக்கடன் மேலாண்மை அறிக்கை!-நிதி அமைச்சகம் அறிவிப்பு.

மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கீழுள்ள பொதுக்கடன் மேலாண்மைப் பிரிவு, பட்ஜெட் பிரிவுடன் இணைந்து, 2010-2011 ஏப்ரல் – ஜூன் (முதல் காலாண்டு) முதல் பொதுக்கடன் மேலாண்மை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. தற்போது, அக்டோபர் முதல் டிசம்பர்  வரையிலான காலாண்டின் (2023-ஆம் நிதியாண்டின் 3-ஆம் காலாண்டு) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2023-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டின்போது, மத்திய அரசு, பங்கு பத்திரங்கள் மூலம் ரூ. 3,51,000 கோடி பணத்தை திரட்டியது. இது, முந்தைய ஆண்டில் ரூ.3,18,000 கோடியாக இருந்தது. இந்த காலாண்டில், ரூ.85,377.9 கோடி திருப்பி செலுத்தப்பட்டது. 2023-வது நிதியாண்டின் 2-வது காலாண்டில் முதன்மை வெளியீடுகளின் சராசரி வரவு 7.33% ஆக இருந்த நிலையில், 3-வது காலாண்டில் 7.38%ஆக இருந்தது. புதிதாக வெளியிடப்பட்ட பங்கு பத்திரங்களின் சராசரியான முதிர்வு, 2023-ஆம் நிதியாண்டின், 3-வது காலாண்டில் 16.56 ஆண்டுகள் என்ற அளவில் இருந்தது. இது 2023-ஆம் நிதியாண்டின் 2-வது காலாண்டில், 15.62 ஆண்டுகள் என்ற அளவில்  இருந்தது. பண மேலாண்மை மசோதாக்கள் மூலம் 2022 அக்டோபர் – டிசம்பர் வரை எந்த தொகையையும் மத்திய அரசு  திரட்டவில்லை. இந்திய ரிசர்வ் வங்கி, இந்தக் காலாண்டில், அரசாங்கப் பத்திரங்களுக்கான திறந்த சந்தை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பணப்புழக்கத்தை சரி செய்யும் வசதியின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கியின் தினசரி நிகர பணப்புழக்கம், விளிம்புநிலை வசதி மற்றும் பணப்புழக்க வசதி ஆகியவை, காலாண்டில் ரூ.39,604 கோடியாக இருந்தது.

எம்.பிரபாகரன்

Leave a Reply