இந்திய கடற்படை செயல்பாடுகள் பிரிவின் தலைமை இயக்குநராக வைஸ் அட்மிரல் அதுல் ஆனந்த், இன்று பொறுப்பேற்றார்.
அவர் 01 ஜனவரி 1988 அன்று இந்திய கடற்படையின் நிர்வாகக் கிளையில் நியமிக்கப்பட்டார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமி (71வது பாடநெறி, டெல்டா படை) பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரி, மிர்பூர் (வங்க தேசம்) மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரி, புது தில்லி ஆகியவற்றின் முன்னாள் மாணவர் ஆவார். அமெரிக்காவின் ஹவாயில் உள்ள பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய பசிபிக் மையத்தில் உள்ள மதிப்புமிக்க அட்வான்ஸ் செக்யூரிட்டி ஒத்துழைப்பு பாடத்திலும் அவர் தேர்ச்சி பெற்றார். இவரின் கல்வித் தகுதிகளில் எம்ஃபில் மற்றும் எம்எஸ்சி டிஃபென்ஸ் மற்றும் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ், முதுகலை மற்றும் பிஎஸ்சி பட்டம் ஆகியவை அடங்கும்.
அதி விஷிஷ்ட் சேவா பதக்கம், விஷிஷ்ட் சேவா பதக்கங்களை அவர் பெற்றுள்ளார். அவர் தனது கடற்படை பணியில் பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார். அவர் கடற்படையின் முதன்மை இயக்குநராகவும், பாதுகாப்பு அமைச்சகத்தின் (கடற்படை) ஒருங்கிணைந்த தலைமையகத்தில் வியூகம், கருத்துகள் மற்றும் மாற்றப்பிரிவின் முதன்மை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். கடற்படை உதவித் தலைவர் (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை), தேசிய பாதுகாப்பு அகாடமியில் துணை கமாண்டன்ட் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர், கடக்வாஸ்லா, மகாராஷ்டிரா கடற்படைக் கட்டளையின் கொடி அதிகாரி மற்றும் கர்நாடக கடற்படைப் பகுதியின் கொடி அதிகாரியாக அவர் பணியாற்றியுள்ளார்.
திவாஹர்