நாட்டின் நிலக்கரித் தேவையைப் பெரும்பாலும் உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்திசெய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஏனெனில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் அத்தியாவசியமில்லாத நிலக்கரி இறக்குமதியை குறைத்துக்கொள்ள முடியும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.
முந்தைய நிதியாண்டைக் காட்டிலும், கடந்த 2021-22ம் நிதியாண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 8.67 சதவீதம் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்தாண்டு பிப்ரவரி மாதம் வரை உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 15சதவீதம் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து 2023-24ம் நிதியாண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2020-21ம் நிதியாண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 671.3 மில்லியன் டன்னாகவும், நிலக்கரியின் இறக்குமதி 164.05 மில்லியன் டன்னாகவும் இருந்தது. அதேநேரத்தில் கடந்த 2021-22ம் நிதியாண்டில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 726.49 மில்லியன் டன்னாகவும், அனல் நிலக்கரியின் இறக்குமதி 151.77 மில்லியன் டன்னாகவும் இருந்தது.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி இன்று எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
எம்.பிரபாகரன்