CEOWORLD என்ற அமெரிக்க பத்திரிகையின் 2023-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஎச்எம் நிறுவனத்திற்கு 13-வது இடம் கிடைத்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் தலைசிறந்த விருந்தோமல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் முதலாமிடம் கிடைத்துள்ளது. இந்த இந்த தரவரிசை ஏழு அறிவியல் சார் அளவீடுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு 38-வது இடத்தில் இருந்த சென்னை ஐஎச்எம் நிறுவனம், தரவரிசையில் படிப்படியாக முன்னேறி இந்த ஆண்டு 13-வது இடத்தை பிடித்துள்ளது. 2017-ம் ஆண்டு 34ம் இடத்திற்கும், 2018-ம் ஆண்டு 28-ம் இடத்திற்கும் முன்னேறியது. தொடர்ந்து 2019-ம் ஆண்டு 24-ம் இடத்தையும், 2020-ம் ஆண்டு 22-ம் இடத்தையும் பிடித்திருந்தது. அதேநேரத்தில் 2021ம் ஆண்டு 18-ம் இடத்திற்கு முன்னேறிய இந்நிறுவனம், கடந்த ஆண்டு 14-ம் இடத்தில் இருந்தது.
வளாக ஆள்சேர்ப்பு மூலம் முன்னணி நட்சத்திர ஹோட்டல்கள், விரைவு சேவை உணவகங்கள், கிளவுட் கிச்சன்கள், சில்லரை வணிகத்துறைகள் ஆகியவை இந்த தரவரிசைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.
புத்தாக்க தொழில்நுட்பப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட வழிமுறைகளைக் கையாண்டதன் பலனாக, இந்த நிறுவனம் தொடர்ச்சியாக முன்னேறி இந்தாண்டு உலகளவில் 13-ம் இடத்தை பிடித்திருப்பதாக, இன்ஸ்டிட்டியூட் ஆப் ஹோட்டால் மேலாண்மை மேனேஜ்மென்ட் ஆளுநர் குழுவின் தலைவரும், தமிழ்நாடு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் அறநிலையத்துறையின் முதன்மை செயலாளருமான டாக்டர் பி. சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனமாக செயல்படும் சென்னை ஐஎச்எம் கல்வி நிறுவனம், 1963ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலக தரம்வாய்ந்த விருந்தோமல் கல்வியை போதித்து வரும் இந்த நிறுவனம் தமது 60-ம் ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. எம்எஸ்சி விருந்தோம்பல் நிர்வாகம் மற்றும் பிஎஸ்சி விருந்தோமல் மற்றும் ஹோட்டல் நிர்வாகப்பட்டப்படிப்புத் திட்டம் கூட்டு நுழைவுத் தேர்வ மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
திவாஹர்