மாநிலங்களவையின் 259ஆவது கூட்டத்தொடர் நிறைவு நாளில் அதன் தலைவரின் உரை.

மதிப்பிற்குரிய உறுப்பினர்களே,

மாநிலங்களவையின் 259ஆவது கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுவது கவலை அளிக்கிறது.

நாடாளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் கண்காணிப்பாளர். இங்கு நாட்டு மக்கள் தான் நமது கண்காணிப்பாளராகவும், வழி நடத்தும் தலைவர்களாகவும் உள்ளனர்.

நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே நமது தலையாயக் கடமையாகும்.

நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு முழுமையான விவாதங்கள், ஆலோசனைகளை நடத்தி, சிறப்பாக முடிவெடுக்கக் கூடிய புனிதமான வளாகமே நாடாளுமன்றம்.

அரசியலை ஆயுதமாகக் கொண்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்வது என்பது, நமது அரசியலுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும். இது பெரும்பாலான மக்களால் வெறுக்கதக்க செயலாகும். அவர்களது மனதில் நாம் கேலிக்கும், கிண்டலுக்கும் உரியவர்களாகவே மாறுகிறோம்.

மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக்கூடியவர்கள் என்ற சாதனையாளர்களாக நம்மை பிரதிபலிக்க வேண்டியது அவசியம். 

தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் இன்றியமையாத பங்கு அளிக்க வேண்டியவர்கள், நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டு அமளியை உருவாக்குவதை  எதிர்கால சந்ததியினர் எப்படி கணிக்கப்போகிறார்கள் ?

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் நாடாளுமன்றம் 56.3 சதவீதம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுள்ள நிலையில், இரண்டாவது அமர்வில் 6.4 சதவீதம் மட்டுமே செயலாற்ற முடிந்தது. ஆக, இரு அவைகளின் ஒட்டுமொத்த ஆக்கப்பூர்வ செயல் திறன் வெறும் 24.4 சதவீதம் தான்.

கூச்சல், குழப்பங்கள் இந்த முறை நாடாளுமன்றத்தின் 103  மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களை ஒட்டுமொத்தமாக விழுங்கியது.

எனவே நம்முடைய வேற்றுமைகளைக் களைந்து விட்டு அவையை சுமூகமாக நடத்துவதற்கான வழியைக் காண வேண்டும்.

அவையை சுமூகமாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட மதிப்பிற்குரிய துணைத் தலைவர், மாநிலங்களவை செயலாளர், துணைத் தலைவர்களின் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் ஈஸ்டர், புத்த பூர்ணிமா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு உங்களுக்கும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த நேரத்தில் எனது  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply