2023 மார்ச் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 12% அதிகரித்து 107.84 மில்லியன் டன்னாக உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 ஆம் ஆண்டு  மார்ச் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 12% அதிகரித்து 107.84 மில்லியன் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில்  நிலக்கரி உற்பத்தி 96.26 மில்லியன் டன்னாக இருந்ததாக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள 37 நிலக்கரி உற்பத்தி சுரங்கங்களில் 29 சுரங்கங்கள் 100 சதவீதம் நிலக்கரி உற்பத்தி  செய்துள்ளன. எஞ்சிய 6 சுரங்கங்கள் 80 முதல் 100 சதவீத உற்பத்தியை அளித்துள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்  போது இந்த ஆண்டு மின்சார பயன்பாட்டுக்கான நிலக்கரி விநியோகம் 4.36 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதே போல் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு ஒட்டுமொத்த மின்சார உற்பத்தி 4.59 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் நிலக்கரியை அடிப்படையாக கொண்ட மின்சார உற்பத்தி 5.7 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த மாதம் 1,28,026 மில்லியன் யூனிட்டாக இருந்த மொத்த மின்சார உற்பத்தி இந்த மாதம் 1,39,718 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 9.13 சதவீதம் வளர்ச்சிப் பதிவாகியிருக்கிறது.

திவாஹர்

Leave a Reply