பாதுகாப்புப் படைத் தலைவர் வடக்கு வங்காளத்தில் உள்ள முன்னணிப் பகுதிகள் & இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் தலைமையகத்தைப் பார்வையிட்டார்.

உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தயார் நிலை மற்றும் செயல்பாடு குறித்து ஆய்வு செய்தார்.

ஏப்ரல் 08 & 09, 2023 அன்று, பாதுகாப்புப் படைத் தலைவர்(CDS) ஜெனரல் அனில் சவுகான், GOC, திரிசக்தி கார்ப்ஸ் உடன் இணைந்து வடக்கு வங்காளத்தில் உள்ள விமானப்படை நிலையம் மற்றும் முன்னணிப் பகுதிகளுக்குச் சென்றார். அவர் அப்பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாடு  தயார்நிலை மற்றும் செயல்பாட்டு முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தார். பாதுகாப்புப் படைத் தலைவர்(CDS) தொலைதூரப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள துருப்புக்களுடன் உரையாடினார். அவர்களின்  மனஉறுதி மற்றும் தொழில்முறையைப் பாராட்டினார்.

ஜெனரல் அனில் சௌஹான் சுக்னாவில் உள்ள திரிசக்தி கார்ப்ஸின் தலைமையகத்தையும் பார்வையிட்டார். அங்கு சிக்கிமில் வடக்கு எல்லையில் உள்ள செயல்பாட்டு நிலைமை குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. கிழக்கு சிக்கிமில் சமீபத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளின் போது சிவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு உதவியதற்காகவும் படை பாதுகாப்பை உறுதி செய்ததற்காகவும் அவர் படையினரைப் பாராட்டினார்.

கடினமான பயிற்சியில் கவனம் செலுத்தவும் எல்லா நேரங்களிலும் விழிப்புடன் இருக்கவும் பாதுகாப்புப் படைத் தலைவர் அறிவுறுத்தினார். தகவல் தொழில்நுட்பத்தின் சமீபத்திய போக்குகள் வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர் நடவடிக்கைகள் போன்றவற்றில் வீரர்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்தித் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply