தமிழக அரசு, மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

தமிழக அரசு, மாநிலத்தில் மின்வாரியத்தில் பனிபுரியும் பணியாளர்களின் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

குறிப்பாக 01.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, குறைந்தது 10 சதவீதம் உள்ளிட்ட பணப்பயன்களை வழங்க கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் மின்வாரியத்தில் உள்ள சுமார் 58,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். B.P. 2 நாள் 12.04.2022 – ஐ ரத்து செய்ய வேண்டும். G.O.100 அடிப்படையில் பணியாளர்கள் ஏற்றுக்கொள்கின்ற வகையில் அரசு உத்தரவாதத்துடன் கூடிய முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

நிரந்தர தன்மை வாய்ந்த பதவிகளுக்கு அவுட்சோர்சிங் முறை வேண்டாம். Redeployment மறுபகிர்வு முறையும் வேண்டாம். இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும்.

இது போன்ற கோரிக்கைகளை மின்வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக அரசுக்கு முன் வைக்கின்றனர்.

இக்கோரிக்கைகள் சம்பந்தமாக மின்வாரியத்தில் பணியாற்றும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 08.03.2023 அன்று பணியைப் புறக்கணித்த பிறகும் ஊழியர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மின்வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும், அவர்களின் குடும்பங்களும் மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள்.

எனவே தமிழக அரசு. தொழிற்சங்கப் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து, சுமூகத் தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் தமிழக அரசும், தமிழ்நாடு மின்சார வாரியமும் மாநிலத்தில் மின்விநியோகம் சரியாக நடைபெறவும், பணியாளர்கள் பணியை முறையாக மேற்கொள்ளவும், தமிழ்நாடு மின்வாரியதொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கோரிக்கைகள் நிறைவேறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கின்றேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply