இலங்கை, யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறைக்கு அப்பால் ஏப்ரல் 09, 2023 அன்று இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான 04 சாக்குகளில் கடல் நீரில் மூழ்கியிருந்த 58 பார்சல்களில் அடைக்கப்பட்ட சுமார் 134 கிலோ 300 கிராம் ஈரமான எடை கொண்ட கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
இலங்கை கடற்படையினரின் தீவிர தேடுதல் நடவடிக்கையை அறிந்து கடத்தல்காரர்கள் இந்த கஞ்சா பொதிகளை அங்கேயே கை விட்டு சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com