ஜம்மு – ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைத்திட்டத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் ஆய்வு .

ஜம்மு – ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைத்திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்கா, மத்திய இணையமைச்சர் டாக்டர் வி கே சிங் மற்றும் மத்திய இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் ஆகியோரும் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.  

ஸ்ரீநகர்– பனிகால் பிரிவின் ஜம்மு முதல் உதம்பூர் மற்றும் ரம்பன் முதல் பனிகாலிருந்து ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை (என்ஹெச்-44) என்ற சாலை திட்டம் கட்டமைக்கப்பட்டு வருவதையும் மத்திய அமைச்சர் மற்றும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சாலையின் சிறப்பு அம்சம் என்னவெனில் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரை அனைத்து பருவ காலங்களிலும்  இணைக்கும் வகையிலான சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ரூ.35,000 கோடி மதிப்பீட்டில் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயானப் போக்குவரத்தை எளிதாக்கும் விதமான 3 வழிப்பாதை கட்டப்பட்டு வருகிறது.

திவாஹர்

Leave a Reply