கோடை காலத்தில் பயணிகளின் சுமூகமான வசதியான பயணத்தை உறுதி செய்ய கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஆண்டு கோடை காலத்தில் ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூடுதல் நெரிசலை சமாளிக்கவும், 217 சிறப்பு ரயில்கள் மூலம் கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்திற்கு இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ரயில்வே வழித்தடங்களில் நாடுமுழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைத்து சிறப்பு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு ரயில்வேயில் அதிகபட்சமாக 69 சிறப்பு ரயில்களும், தென்மத்திய ரயில்வேயில் 48 சிறப்பு ரயில்களும், தெற்கு ரயில்வேயில் 20 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

இருக்கைகளை  முடக்கிவைத்தல், அதிக கட்டணம் வசூலித்தல், இடைத்தரகர் நடவடிக்கை போன்ற முறைகேடுகள் கடுமையாக கண்காணிக்கப்படும்.

திவாஹர்

Leave a Reply