மத்திய அரசு, நரிக்குறவ இன மக்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அரசாணை வெளியிட்டதை உறுதி செய்துகொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமை.
அதாவது நரிக்குறவர் நரிக்குறவர் இன மக்கள் அவர்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினத்தில் சேர்க்க பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்த வேளையில் அவர்களின் கோரிக்கையை மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியது. மேலும் நரிக்குறவ இன மக்களுக்கான திருத்தப்பட்ட மசோதாவானது, சட்டமாக நிறைவேற்றப்பட்டு, அதற்கான அரசாணை இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த அரசாணையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக நரிக்குறவ இன மக்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினத்தில் சேர்க்க அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும்போது அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசும், அரசாணை வெளியிட்டது. ஆனால் இன்னும் நரிக்குறவ இன மக்களுக்கு இணையதளத்தின் மூலம் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ் கிடைப்பதில் தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில், காரை ஊராட்சி அருகே உள்ள மலையப்ப நகரில் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மாநில பொறுப்பில் உள்ள திரு. சுப்ரமணியன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மகள் +2 படித்து முடித்து விட்டு, நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் மேல் படிப்புக்காக இணையதளத்தில் சாதி சான்றிதழ் இணைக்க வேண்டிய கட்டாயத்தில், இவருக்கு இன்னும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் அந்த மாணவி இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்பில் சேர்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் நரிக்குறவ இன மக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை குறிப்பிட்டு வழங்குவதில் தடையோ, இடையோறோ ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதன் அடிப்படையிலேயே நரிக்குறவ இன மக்கள் அதன் முன்னேறுவார்கள். பயனை அடைந்து கல்வியில், வேலை வாய்ப்பில்
மேலும் தமிழக அரசு, நரிக்குறவ இன மக்களின் நலன் கருதி அவர்களுக்கான உரிமையை நிலைநாட்ட, உரிய நடவடிகையை காலத்தே மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா