மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்த்தல், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (23.04.2023) தமது மக்களவைத் தொகுதியின் பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளுடன் இணையதளம் வழியாகக் கருத்தறியும் அமர்வை நடத்தினார்.
டாக்டர் ஜிதேந்திர சிங், பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் இரண்டு குழுக்களாக, இரண்டு தனித்தனி அமர்வுகளில், ஒவ்வொன்றும் ஒன்றரை மணிநேரம் என மொத்தம் மூன்று மணி நேரம் கலந்துரையாடினார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், ஒவ்வொரு வாரமும் அவர் தனது தொகுதியின் ஒரு மாவட்டத்திற்கு நேரடியாகச் சென்று, அந்தக் குறிப்பிட்ட வாரத்தில் அவர் நேரடியாகச் செல்லாத மற்ற மாவட்டத்துடன் இணையம் வழியாக இணைக்க முயற்சிக்கும் அண்மைக்கால சுழற்சிமுறையின் ஒரு பகுதியாகும் இது.
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 30ஆம் தேதி பங்கேற்கவிருக்கும் மனதின் குரல் நிகழ்வின் 100வது பகுதியைக் கேட்குமாறு பஞ்சாயத்து ராஜ் பிரதிநிதிகளை டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியை ஒரு சமூகம் கேட்கும்படியாக வடிவமைத்து, ஏராளமான மக்கள் ஒன்றாக அமர்ந்து ஒரு திருவிழாவைப் போல் இதனைக் கொண்டாடலாம் என்றும் அவர் கூறினார். மனதின் குரல் நிகழ்வின் 100வது பகுதி கொண்டாட்டத்திற்குத் தகுதியானது. ஏனெனில் இது அரசுத் தலைவரால் முற்றிலும் அரசியல் சாராத ஒலிபரப்பாக உள்ளது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சென்றடையும் நலத் திட்டங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். ஒரு அரசுத் தலைவர் ஒரு மாதமும் தவறாமல், ஒரு தடங்கலும் இல்லாமல், தனது பார்வையாளர்களுடன் உரையாடுவது இதுவே முதல்முறை மற்றும் சாதனையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
எம்.பிரபாகரன்