பூரி – கங்கா சாகர் திவ்ய காசி யாத்திரையை பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் மூலம் இந்திய ரயில்வே 2023 ஏப்ரல் 28 அன்று தொடங்கவுள்ளது.

உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ரயில்வே அமைச்சகம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரத் கௌரவ் சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. இந்த ரயில்கள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தையும், மதப் பாரம்பரியத்தையும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

2023-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி புனேயில் இருந்து பூரி – கங்கா சாகர் திவ்ய காசி யாத்திரை ரயிலைத் தொடங்க ரயில்வே தயாராக உள்ளது. 9 இரவுகள் / 10 பகல்கள் கொண்ட இப்பயணத்தில் பூரி, கொல்கத்தா, கயா, வாரணாசி, பிரயாக்ராஜ் ஆகிய முக்கியமான சமயத் தலங்கள் அடங்கியுள்ளன. இங்குள்ள மிகவும் பிரபலமான கோயில்கள் மற்றும் புண்ணியத் தலங்களான பூரி ஜகன்நாதர் கோயில், கோனார்க் கோயில், பூரியில் உள்ள லிங்கராஜ் கோயில், கொல்கத்தாவில் உள்ள காளி பாரி மற்றும் கங்கா சாகர், விஷ்ணுக் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசியில்  உள்ள கங்கா காத் மற்றும் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் காணலாம்.

உணவு, வாகனம், தங்குமிடங்கள், பயணிகளின் பாதுகாப்பு, பயணக் காப்பீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், பாரத் கௌரவ் ரயில் மூலம் ஐஆர்சிடிசி வழங்குகிறது. 7 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், மூன்று 3 அடுக்கு  ஏசி பெட்டிகள், ஒரு 2 அடுக்கு  ஏசி பெட்டிகள் என 750 பயணிகள் இதில் பயணிக்க முடியும். பயணிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக இதன் கட்டணமும் குறைவாகவே உள்ளது.

எம்.பிரபாகரன்

Leave a Reply