தமிழக அரசு, முதற் கட்டமாக 500 மதுக்கடைகளை குறைப்போம். பிறகு படிப்படியாக மதுக்கடைகளை குறைப்போம் என்று அறிவித்து இருந்தது.
ஆனால் அதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை, மதுவிலக்கை அமுல்படுத்துவதில், ஏதாவது ஒரு வழியில் மக்களை மதுவிற்கு அடிமையாக்க தமிழக அரசு நினைக்கிறது.
அரசின் வருமானத்தை பெருக்க பல்வேறு வழிகள் இருக்கும் போது, ஏழை, எளிய, நடுத்தர மக்களை மதுவிற்கு அடிமையாக்கி அதன் மூலம் வருமானத்தை பெருக்க நினைப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.
கடந்த சட்ட மன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி, மதுவிலக்கிற்கு என் முதல் கையெழுத்து என்று அறிவித்த திமுக அரசு, இன்று அவற்றை செயலாக்காமல் வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவதை தமிழ் மாநில காங்கிரஸ் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்