பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வழிகாட்டுதலிலும், இணையதளப் பாதுகாப்பு மிக்க இந்தியாவை உருவாக்குவது உள்துறை அமைச்சகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், இணையதளக் குற்றங்களைத் தடுப்பதற்கும், இணையதளக் குற்றங்கள் தொடர்பான அச்சுறுத்தல்களில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் உள்துறை அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. இதுபோன்ற மோசடியாளர்கள் பயன்படுத்தும் தொலைபேசி எண்கள் மற்றும் சமூக ஊடக இணைப்புகளை என்.சி.ஆர்.பி. எனப்படும் குற்ற ஆவணக் காப்பகத்துக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலம் உடனடியாகத் தெரிவிக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்
இந்திய இணையதளக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் என்பது நாட்டில் நடைபெறும் இணையதளக் குற்றங்களை ஒருங்கிணைந்த மற்றும் விரிவான முறையில் கையாள்வதற்கான உள்துறை அமைச்சகத்தின் முன்முயற்சியாகும். இந்திய இணையதளக் குற்றத் தடுப்பு ஒருங்கிணைப்பு மையம், மோசடிகளில் ஈடுபட்டுள்ள 100 க்கும் அதிகமான வலைத்தளங்களை பகுப்பாய்வுப் பிரிவு மூலம் கடந்த வாரம் அடையாளம் கண்டு பரிந்துரைத்தது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இந்த இணையதளங்களை முடக்கியுள்ளது.
திவாஹர்