நிலக்கரி அமைச்சகம் டிசம்பர் 2023-ல் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியில் கணிசமான உயர்வை அடைந்துள்ளது, இது 92.87 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் 83.86 மில்லியன் டன்னை விட அதிகமாகும், இது 10.75% அதிகரிப்பைக் குறிக்கிறது. இந்தியன் நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி 2022 டிசம்பரில் 66.37 மில்லியன் டன்னிலிருந்து 8.27 சதவீத வளர்ச்சியுடன் 2023 டிசம்பர் மாதத்தில் 71.86 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 2022-23-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 608.34 மில்லியன் டன்னாக இருந்த ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி (டிசம்பர் 2023 வரை) 2023-24-ம் நிதியாண்டில் 684.31 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது.
2023 டிசம்பரில் நிலக்கரி ஏற்றுமதி 86.23 மில்லியன் டன்னை எட்டியது, இது 2022 டிசம்பரில் பதிவு செய்யப்பட்ட 79.58 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது, இது 8.36% வளர்ச்சி விகிதத்துடன். இந்திய நிலக்கரி நிறுவனத்தின் ஏற்றுமதி 2023 டிசம்பரில் 66.10 மில்லியன் டன்னாக இருந்தது, இது 2022 டிசம்பரில் 62.66 மில்லியன் டன்னாக இருந்தது, இது 5.49% வளர்ச்சியைக் குறிக்கிறது. 2022-23-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 11.36% வளர்ச்சியுடன் 637.40 மில்லியன் டன்னாக இருந்த ஒட்டுமொத்த நிலக்கரி விநியோகம் (டிசம்பர் 2023 வரை) 23-24-ம் நிதியாண்டில் 709.80 மில்லியன் டன்னாக கணிசமாக உயர்ந்துள்ளது.
திவாஹர்