குஜராத்தின் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாடு 2024-ல் எதிர்காலத்திற்கான பணியாளர்களை உருவாக்குதல், தொழில்துறைக்கான திறன் மேம்பாடு 4.0 என்ற தொடக்க அமர்வில் மத்திய கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். இந்த அமர்வில் முக்கிய தொழில்துறை தலைவர்கள், தொழில்முனைவோர், குஜராத் அரசு அதிகாரிகள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான், துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு 2024 தேசிய முன்னுரிமைகளை நிர்ணயிப்பதற்கான நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை பிரதிபலிக்க சரியான தளமாகும் என்று குறிப்பிட்டார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் ஆகியோருக்கு மரியாதை செலுத்திய திரு பிரதான், உலக அளவில் நாட்டின் நிலையை உயர்த்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகக் கூறினார்.
பிரதமர் தலைமையின் கீழ், குஜராத் மாதிரி வளர்ச்சி, வளர்ச்சியடைந்த பாரதம் @ 2047 என்ற தொலைநோக்கு பார்வையை அடைவதற்கான மாநிலங்களின் திறன் முயற்சிகளுக்கு வழிகாட்டியாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கல்வி, திறன், சுற்றுச்சூழல் அமைப்பில் தேசிய கல்விக் கொள்கை தலைமையிலான ஒருங்கிணைப்பு நாட்டின் இளையோர் சக்தியை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவின் புத்தொழில், புதுமைக் கண்டுபிடிப்பு கலாச்சாரம் நாட்டை அறிவு மற்றும் திறன்களின் மையமாக மாற்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.
பரந்த மக்கள் தொகையின் திறன், உற்பத்தித் திறனை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் பேசினார். தொழில்துறை, புதுமை கண்டுபிடிப்புகளில் உலகில் பிரதானமாகச் செயல்பட்டு வரும் தொழில்துறை 4.0-ஐ பயன்படுத்துவதில் இந்தியா எவ்வாறு உறுதியாக உள்ளது என்பதை திரு பிரதான் எடுத்துரைத்தார்.
உலக மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா அதன் இளைஞர்களால் அதிகாரம் பெறுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த 25-30 ஆண்டுகளில், உழைக்கும் வயது மக்கள் தொகையில் நாடு முன்னணியில் இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய, ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்று திரு பிரதான் வலியுறுத்தினார்.
எம்.பிரபாகரன்