அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டி.எஸ்.டி) செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் தலைமையிலான இந்தியக் குழு அமெரிக்காவின் ஹவாயில் உள்ள மவுனா கியாவுக்குச் சென்று முப்பது மீட்டர் தொலைநோக்கி (டி.எம்.டி) திட்டத்தில் உள்ள சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான வழிகள் குறித்து விவாதித்தது.
முப்பது மீட்டர் தொலைநோக்கி (டிஎம்டி) என்பது அமெரிக்காவின் ஹவாயில் உள்ள மவுனா கியாவில் நிறுவப்பட்ட 30 மீட்டர் விட்டம் கொண்ட முதன்மை கண்ணாடி ஒளியியல் மற்றும் அகச்சிவப்பு தொலைநோக்கி ஆகும். ஒளியியல் மற்றும் அகச்சிவப்பு வானியல் மூலம் பிரபஞ்சத்திற்கு புதிய சாளரங்களைத் திறப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டத்தில் இந்தியா ஒரு நிறுவன உறுப்பினராக உள்ளது. இந்தத் திட்டத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு 2014 ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
பேராசிரியர் அபய் கரண்டிகர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட இந்திய தூதுக்குழு 2024 ஜனவரி 9 அன்று ஹவாயில் முப்பது மீட்டர் தொலைநோக்கி (டிஎம்டி) சர்வதேச வான்காணக (டிஐஓ) வாரியத்தின் தலைவர் பேராசிரியர் ஹென்றி யாங், டிஐஓ நிர்வாக இயக்குநர் பேராசிரியர் ராபர்ட் கிர்ஷ்னர் மற்றும் டிஎம்டி திட்ட மேலாளர்களைச் சந்தித்தது.
டி.எம்.டி.யின் தற்போதைய நிலை, குறிப்பாக மவுனா கியா தளம், சிவில் கட்டுமானத்தின் தொடக்கம், தற்போதைய நிதி நிலைமை, திட்டத்திற்கான வழங்கல்களை நோக்கி இதுவரை மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள், தற்போதைய சூழ்நிலையில் எதிர்பார்க்கப்படும் காலக்கெடு ஆகியவற்றை மையமாகக் கொண்டு விவாதங்கள் நடைபெற்றன.
ஹவாய் மாகாண சட்டமன்றத்தின் அவைத் தலைவர் திரு ஸ்காட் சாய்கி, மௌனா கியா மேற்பார்வை ஆணையத்தின் தலைவர் திரு ஜான் கோமிஜி, ஹவாய் மேயர் திரு மிட்ச் ரோத், பூர்வீக ஹவாய் மற்றும் இமிலோவா வானியல் மையத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி கையு கிமுரா, கேடிஏ சூப்பர்ஸ்டோர்ஸ் தலைவர் திரு டோபி டானிகுச்சி, ஹவாய் மற்றும் இயற்கை வளங்கள் துறையின் புவா இஷிபாஷி, பூர்வீக ஹவாய் மேயர் தேர்தல் 2024- ஆண்டுக்கான வேட்பாளர் டாக்டர் கிமோ அலமேடா ஆகியோருடன் தனித்தனியே சந்திப்புகள் நடத்தப்பட்டன.
முடிவெடுக்கும் செயல்பாடுகளின் ஹவாயைச் சேர்ந்தவர்களை ஈடுபடுத்துவதற்கான செயல்முறையைத் தொடங்குவது, தற்போதைய சூழ்நிலையில் திட்டத்திற்கான முன்னோக்கிய வழி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், ஹவாய் மக்களைச் சேர்ப்பது, நிதி இருப்பு மற்றும் வாய்ப்புகள், கட்டுமான வசதிகள், முப்பது மீட்டர் தொலைநோக்கியை நிறுவுவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியத் தூதுக்குழுவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
எஸ்.சதிஸ் சர்மா