செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதே சமயம் செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வருவதற்கு இந்த இலாகா இல்லாத அமைச்சர் பதவி தான் பெரும் தடையாக தொடர்ந்து இருந்து வருகிறது.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து ஜாமீனில் உடனே வெளியே வர வேண்டுமானால் செந்தில் பாலாஜி அதிரடியாக இரண்டு காரியங்களை உடனே செய்தாக வேண்டும்.
முதலில் தனது இலாகா இல்லாத அமைச்சர் பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை நான் அமைச்சராகவோ (அல்லது) அதிகாரம் உள்ள வேறு எந்த அரசு பதவிகளிலும் நீடிக்க மாட்டேன் என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அடுத்து கடந்த 200 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை உடனடியாக அமலாக்க துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜர் படுத்தவேண்டும்.
இந்த இரண்டும் உடனே நடந்தால் செந்தில் பாலாஜிக்கு நிச்சயம் ஜாமீன் கிடைத்துவிடும். இல்லையென்றால் செந்தில் பாலாஜியின் அரசியல் பொது வாழ்க்கை மட்டுமல்ல: அவரது எதிர்காலமே அஸ்தமனம் ஆகிவிடும்.
நாம் வெளியிடும் ஒவ்வொரு செய்திகளிலும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்போ அரசியல் உள்நோக்கமோ, வளர்ந்தவர்களுக்கு மட்டுமே வால் பிடிக்கும் போக்கோ, பரபரப்புக்காக வதந்திகளை மட்டுமே செய்திகளாக வெளியிடும் வணிக நோக்கமோ நமக்கு ஒரு போதும் இருந்ததில்லை.
எது உண்மையோ, எது நடக்குமோ, எது நடைமுறை சாத்தியமோ அதை சொல்வதில் எமக்கு எந்த தயக்கமும் இல்லை. அந்த அடிப்படையில் தான் இந்த செய்தியையும் நாம் பதிவு செய்துள்ளோம்.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
இது போன்ற முக்கிய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
ஓ.பி.எஸ்.எதிர்காலம் என்னாகும்?! ஆசிரியர் அன்று சொன்னது அப்படியே இப்போது நடந்து முடிந்துள்ளது. https://www.ullatchithagaval.com/2023/04/24/86005/