இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின் மேம்பாட்டு அமைப்பான தேசியப் புனல் மின் கழகம், மிதக்கும் சூரிய மின்சக்தி தொழில்நுட்ப வழங்குநராக செயல்படும் நார்வே நிறுவனமான ஓஷன் சன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சூரிய மின்தகடுகள் அடிப்படையில் ஓஷன் சன் நிறுவனத்தின் மிதக்கும் சூரிய சக்தி தொழில்நுட்பத்தை செயல்விளக்கம் செய்யும் ஒத்துழைப்புக்கான முக்கிய பகுதிகளை தேசியப் புனல் மின் கழகமும், ஓஷன் சன் நிறுவனமும் ஆராயும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசியப் புனல் மின் கழக நிர்வாக இயக்குநர் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன்), திரு வி.ஆர்.ஸ்ரீவஸ்தவா, ஓஷன் சன் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி திரு கிறிஸ்டியன் டோர்வோல்ட் ஆகியோர் 2024 ஏப்ரல் 29 அன்று மெய்நிகர் முறையில் கையெழுத்திட்டனர். இந்தியாவுக்கான நார்வே தூதர் திரு மே-எலின் ஸ்டெனர்; தேசியப் புனல் மின் கழக இயக்குநர் (தொழில்நுட்பம்) திரு ராஜ் குமார் சவுத்ரி, செயல் இயக்குநர் (உத்திகள் வகுத்தல், வணிக மேம்பாடு மற்றும் ஆலோசனை), திரு ரஜத் குப்தா ஆகியோர் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் புதுதில்லியில் உள்ள நார்வே தூதரகத்தில் இருந்தும் நார்வேக்கான இந்திய தூதர் டாக்டர் அக்யூனோ விமல் ஆஸ்லோவில் இருந்தும் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
எஸ்.சதிஸ் சர்மா