ஏப்ரல் 2024-க்கான இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 78.69 மில்லியன் டன்னை (தற்காலிகமானது) எட்டியது, முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 7.41% வளர்ச்சியை பெற்றுள்ளது. இது கடந்த ஆண்டில் 73.26 மில்லியன் டன்னாக இருந்தது. ஏப்ரல் 2024-ல், கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) 61.78 மில்லியன் டன் (தற்காலிக) நிலக்கரி உற்பத்தியை அடைந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 7.31% வளர்ச்சியாகும். இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 57.57 மில்லியன் டன்னாக இருந்தது.
ஏப்ரல் 2024-ல் இந்தியாவின் நிலக்கரி கையாளுதல் 85.10 மில்லியன் டன்னை (தற்காலிக) எட்டியது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 6.07% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 80.23 மில்லியன் டன் நிலக்கரி கையாளப்பட்டது. ஏப்ரல் 2024-ல், சிஐஎல் 64.26 மெட்ரிக் டன் (தற்காலிக) நிலக்கரியை அனுப்பியது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 3.18% வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இது 62.28 மில்லியன் டன்னாக இருந்தது.
எம்.பிரபாகரன்