மக்களவைத் தேர்தல் 2024 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே 13-ம் தேதி நடைபெற உள்ள நான்காம் கட்ட தேர்தலில் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட தேர்தலுக்காக 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு மொத்தம் 4264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் 4 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஏப்ரல் 25, ஆகும். தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வேட்பு மனுக்களையும் பரிசீலனை செய்த பிறகு, 1970 வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் என்று கண்டறியப்பட்டது.
நான்காம் கட்டத்தில், தெலங்கானாவில் அதிகபட்சமாக 17 மக்களவைத் தொகுதிகளில் இருந்து அதிகபட்சமாக 1488 வேட்பு மனுக்களும் அதைத் தொடர்ந்து ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளில் இருந்து 1103 வேட்பு மனுக்களும் மல்கஜ்கிரி மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 177 வேட்பு மனுக்களும் நல்கொண்டா மற்றும் போங்கிர் தொகுதியில் தலா 114 வேட்பு மனுக்களும் பதிவாகியுள்ளன. நான்காம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி எண்ணிக்கை 18 ஆகும்.
மாநிலம்/ யூனியன் பிரதேசம் | 4-ம் கட்டத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை | பெறப்பட்ட வேட்பு மனுக்கள் | பரிசீலனைக்கு பின் செல்லுபடியான மனுக்கள் | வேட்பு மனு வாபஸ் பெற்ற பின்பு களத்தில் உள்ள வேட்பாளர்கள் |
ஆந்திரப் பிரதேசம் | 25 | 1103 | 503 | 454 |
பீகார் | 5 | 145 | 56 | 55 |
ஜம்மு காஷ்மீர் | 1 | 39 | 29 | 24 |
ஜார்க்கண்ட் | 4 | 144 | 47 | 45 |
மத்தியப் பிரதேசம் | 8 | 154 | 90 | 74 |
மஹாராஷ்டிரா | 11 | 618 | 369 | 298 |
ஒடிசா | 4 | 75 | 38 | 37 |
தெலங்கானா | 17 | 1488 | 625 | 525 |
உத்தரப்பிரதேசம் | 13 | 360 | 138 | 130 |
மேற்கு வங்கம் | 8 | 138 | 75 | 75 |
மொத்தம் | 96 | 4264 |
எம்.பிரபாகரன்