புதுச்சேரி என்ஐடி-யில் இயந்திரவியல் துறை சார்பாக ஏழு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு.

காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப கழகம் புதுச்சேரியில் இயந்திரவியல் துறை சார்பாக தொழில்துறை மற்றும் பொறியியல் பயன்பாடுகளுக்கான அதிவேக தொழில்நுட்பங்கள் மற்றும் அணியக்கூடிய சாதனங்கள் என்ற தலைப்பில் ஏழு நாள் கருத்தரங்கமானது கல்லூரியில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய்  வளாகத்தில் (13.05.2024) தொடங்கியது. இக்கருத்தரங்கிற்கு அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் நிதியுதவி அளித்துள்ளது.

இக்கருத்தரங்கினை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருச்சி என்ஐடி-யின் பேராசிரியர் முனைவர்.  கி. சங்கரநாராயணசாமி, புதுச்சேரி என்ஐடி டீன் முனைவர். ஜி எஸ் மஹாபத்ரா முன்னிலையில் தொடங்கிவைத்தார்.

இக்கருத்தரங்கத்தை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு கழகத்தின் இயக்குனர் முனைவர். மகரந்த் மாதோ காங்ரேகர், பதிவாளர் முனைவர். சீ. சுந்தரவரதன் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இக்கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய முனைவர். கி. சங்கரநாராயணசாமி தொழில்துறை சூழல்களில் அதிவேக தொழில்நுட்பங்களின் திறனைப் பற்றி விவாதித்தார். மேலும் அவர் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்), ஆக்மென்ட்டட் ரியாலிட்டி (ஏஆர்) மற்றும் கலப்பு ரியாலிட்டி (எம்ஆர்) உள்ளிட்ட இந்த அதிநவீன கருவிகள், தொழில்துறை நிலப்பரப்பில் நாம் வேலை செய்யும், பயிற்சியளிக்கும் மற்றும் ஒத்துழைக்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துகின்றன என்றும் கூறினார்.

இக்கருத்தரங்கில் நமது நாட்டிலுள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து சுமார் 25 பங்கேற்பாளர்கள் தங்கள் அறிவை மேலும் மேம்படுத்திக்கொள்ளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இக்கருத்தரங்கில் ஐஐடிகள், என்ஐடிகள், ஐஐஎஸ்இஆர் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள இதர முதன்மை நிறுவனங்களில் இருந்து 12 துறை வல்லுநர்கள் விரிவுரை வழங்கவுள்ளனர்.

திவாஹர்

Leave a Reply