மின் நிதிக் கழகம் 2023-24-ம் நிதியாண்டிற்கான அதன் நிதி செயல்பாடுகளை மும்பையில் இன்று (15.5.2024) நடைபெற்ற நிகழ்வில் அறிவித்தது.
ஒருங்கிணைந்த நிதி சிறப்பம்சங்கள்
மின் நிதிக் கழகக் குழுமம் 25% அதிகரிப்புடன் வரிக்குப் பிந்தைய அதிக வருடாந்தர லாபத்தை பதிவு செய்தது. அதாவது 2023-ம் நிதியாண்டில் ரூ.21,179 கோடியாக இருந்த நிலையில், 2024-ம் நிதியாண்டில் ரூ.26,461 கோடியாக இருந்தது.
மின் நிதிக் கழகக் குழுமத்தின் 2024-ம் நிதியாண்டின் மொத்த இருப்புநிலை ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடந்து நாட்டின் மிகப்பெரிய வங்கி சாரா நிதிக்குழுமமாக தொடர்கிறது. தற்போதைய இருப்புநிலை ரூ.10.39 லட்சம் கோடியாகும்.
31.03.2023 அன்று ரூ.8,57,500 கோடியாக இருந்த ஒருங்கிணைந்த கடன் சொத்து 16% அதிகரித்து 31.03.2024 அன்றைய நிலவரப்படி ரூ.9,90,824 கோடியாக உயர்ந்துள்ளது.
ஒருங்கிணைந்த நிகர மதிப்பு (கட்டுப்பாடற்ற வட்டி உட்பட) 20% அதிகரித்துள்ளது. 31.03.2023 நிலவரப்படி ரூ.1,11,981 கோடியாக இருந்தது. இது 31.03.2024 நிலவரப்படி ரூ.1,34,289 கோடியாக உள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா