அனல் மின் நிலையங்களுக்கு சீரான நிலக்கரி வழங்குவதை உறுதி செய்ய நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உற்பத்தி அதிகரிப்பு, திறன் வாய்ந்த சரக்கு போக்குவரத்து ஏற்பாடுகள், முகமைகளுக்கு இடையேயான சுமூகமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் விளைவாக, அனல் மின் நிலையங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளது.
உச்ச மின்தேவை உள்ள காலங்களில் நாடு முழுவதும் மக்களுக்கு தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு மின் உற்பத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு, 2024 ஜூன் 16, நிலவரப்படி 45 மில்லியன் டன்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 31.71 சதவீதம் அதிகமாகும்.
நிலக்கரி அடிப்படையிலான மின்சாரத்தின் தேவை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட இந்த நிதியாண்டில் 7.30 சதவீதம் அதிகரித்துள்ளது.
16.06.24 நிலவரப்படி, ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 207.48 மில்லியன் டன்னாக உள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 9.27 சதவீத வளர்ச்சியாகும்.
சீரான மற்றும் போதுமான அளவு நிலக்கரி விநியோகத்தை உறுதி செய்ய மின்துறை அமைச்சகம், நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் ஆகிய அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
திவாஹர்