புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய எஃகு மாநாடு 2024-ல், இந்திய எஃகு சங்கம் (ISA), மதிப்புமிக்க ‘பாலின பன்முகத்தன்மை விருதை’ விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் துணைப் பொது மேலாளர் (மனிதவளம்) டாக்டர் தாசரி ராதிகாவுக்கு அர்ப்பணிப்பில் சிறந்து விளங்கியதற்காக வழங்கியுள்ளது. இந்த விருதை இந்திய அரசின் எஃகு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஸ்ரீ நாகேந்திர நாத் சின்ஹா எஃகு தொழில்துறையைச் சேர்ந்த பல பிரமுகர்கள் முன்னிலையில் வழங்கினார்.
டாக்டர் தாசரி ராதிகா, துணைப் பொது மேலாளர் (மனிதவளம்), பாலின பன்முகத்தன்மை தேசிய விருதை எஃகு அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் திரு நாகேந்திர நாத் சின்ஹாவிடமிருந்து, ஐ.ஏ.எஸ் (ஓய்வு) பெற்றார்.
தேசிய எஃகு நிறுவனத்தின் (RINL) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு அதுல் பட், டாக்டர் தாசரி ராதிகாவுக்கு மிகவும் மதிப்புமிக்க ‘பாலின பன்முகத்தன்மை’ விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் “இது ஆர்.ஐ.என்.எல்-க்கு ஒரு பெருமிதம் அளிக்கும் தருணம்” என்று விவரித்தார்.
டாக்டர் தாசரி ராதிகா ஒரு அனுபவமிக்க மனிதவள நிபுணர் மற்றும் அவரது வாழ்நாள் முழுவதும் குறிப்பிடத்தக்க எழுச்சி மற்றும் உறுதியை நிரூபித்துள்ளார். எஃகுத் தொழில் பெண்களுக்கு சாதகமான தேர்வாக இல்லாத ஒரு சகாப்தத்தில், டாக்டர் டி.ராதிகா அச்சமின்றி ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் இறங்கினார், தொடர்ந்து துன்பங்களைத் தாண்டி பாலின தடைகளை உடைத்தார்.
டாக்டர் தாசரி ராதிகாவின் முன்மாதிரியான பயணம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும், சொந்தமான உணர்வை வளர்ப்பதற்கும், சமத்துவம் மற்றும் நியாயத்தை ஊக்குவிப்பதற்கும், பணியில், குறிப்பாக விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் சவாலான மண்டலங்களில், ஒரு உண்மையான தலைவராக நிற்பதன் மூலம் அவரது அர்ப்பணிப்பில் சிறந்து விளங்கியதற்காகவும் இந்திய எஃகு சங்கம் டாக்டர் தாசரி ராதிகாவுக்கு ‘பாலின பன்முகத்தன்மை’ விருதை வழங்கியுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா