2034-ம் ஆண்டுக்குள, 500 மில்லியன் டன் உள்நாட்டு எஃகு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய  எஃகு சங்கத்தின் 5-வது எஃகு மாநாட்டில் உரையாற்றிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், 2034-ம் ஆண்டுக்குள் 500 மில்லியன் டன் எஃகு உற்பத்தியை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று  கூறினார்.

உள்நாட்டு எஃகுத் தொழிலுக்காக மேலும் மூன்று பரிந்துரைகளை மத்திய அமைச்சர் முன்வைத்தார். முதலாவதாக, குறைந்த உமிழ்வு, அதிக உற்பத்தித்திறன் மற்றும் உயர் தரம் ஆகியவற்றை நோக்கி இந்தியாவை உலகில் தவிர்க்க முடியாத எஃகு உற்பத்தியாளராக மாற்ற, புதிய மற்றும் சிறந்த வழிகளைக் கண்டறியுமாறு அவர் தொழில்துறையினரைக் கேட்டுக் கொண்டார். இரண்டாவதாக, உற்பத்தியை மேம்படுத்தவும், கழிவுகளைக் குறைக்கவும், மதிப்புச் சங்கிலியில் செயல்திறனை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துமாறு, தொழில்துறையை அவர் வலியுறுத்தினார். மூன்றாவதாக, உள்நாட்டு உற்பத்திக்கு உள்நாட்டு இயந்திரங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், அமைச்சர் தொழில்துறையை வலியுறுத்தினார்.

இந்திய எஃகு ஒரு இந்தியாவின்’ தயாரிப்பு என்று வணிகப்படுத்தியதற்காக எஃகு துறையையும் அவர் பாராட்டினார். இது நமது வளர்ந்து வரும் தற்சார்பு இந்தியாவுக்கான அறிகுறியாகும் என்று தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்டு நுகரப்படும் எஃகு நமது நாட்டின் உணர்வை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

Leave a Reply