முன்னாள் ராணுவத்தினருக்கான வேலைவாய்ப்பு முகாமை பாதுகாப்புத் துறை இணையமைச்சர் ராஞ்சியில் தொடங்கி வைத்தார்.

முன்னாள் ராணுவத்தினருக்கான வேலைவாய்ப்பு முகாமை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் 2024, செப்டம்பர் 06  அன்று ராஞ்சியில் தொடங்கி வைத்தார். மறுவேலைவாய்ப்பு கோரும் முன்னாள் ராணுவ வீரர்களையும், வேலைவாய்ப்பு அளிப்பவர்களையும் ஒரு பொதுவான மேடையில் கொண்டு வருவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையின் மீள்குடியேற்ற தலைமை இயக்குநரகம் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 1028-க்கும் அதிகமான முன்னாள் ராணுவவீரர்கள் வேலைக்கு பதிவு செய்தனர்.  42 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றன. அவை 763 காலியிடங்களையும் 2௦௦-க்கும் அதிகமான தொழில் முனைவோர் வாய்ப்புகளையும் வழங்கின. பதினேழு முன்னாள் ராணுவ வீரர்கள் அந்த இடத்திலேயே பணியமர்த்தப்பட்டனர். 05 பேர் பணியில் சேர அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இந்த முகாம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நன்மை பயப்பதாக இருந்தது. முந்தையவர்கள் தங்கள் சேவையின் போது பெற்ற தொழில்நுட்ப, நிர்வாக வலிமையை வெளிப்படுத்தும் ஒரு தளத்தைப் பெற்றனர். பிந்தையவர்கள் அனுபவம், ஒழுக்கம் மற்றும் பயிற்சி பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழுவை பணியமர்த்துவதன் மூலம் பயனடைந்தனர்.

Leave a Reply