ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் “விளையாட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

மேஜர் தியான் சந்த் பிறந்த நாளை முன்னிட்டும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் தேசிய விளையாட்டு தினம் 2024 கொண்டாட்டங்களைத் தொடர்ந்தும், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 27 ஆகஸ்ட் 2024 முதல் 30 ஆகஸ்ட் 2024 வரை , புதுதில்லி மேஜர் தியான் சந்த் ஸ்டேடியம் மற்றும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் “விளையாட்டு விழா 2024” ஐ ஏற்பாடு செய்தது

அமைச்சகம் தனது முதல் பதிப்பில், கிரிக்கெட், ஹாக்கி, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் ஆகிய நான்கு விளையாட்டுகளில் போட்டிகளை ஏற்பாடு செய்தது. அமைச்சகத்தின் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இந்த நிகழ்வை ஒரு பெரிய வெற்றியாக மாற்றினர். விளையாட்டு விழா நிகழ்ச்சியின் வரவிருக்கும் பதிப்புகளில் மேலும் பல விளையாட்டுகளை சேர்க்க அமைச்சகம் விரும்புகிறது.

மேஜர் தியான் சந்த் கோப்பைகளை வழங்கும் விழா செப்டம்பர் 4 –ந் தேதி அன்று சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கோப்பை வழங்கும் விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு. சஞ்சய் ஜாஜு மற்றும் அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply