நீர்மூழ்கி கப்பலில் தப்பிக்கும் பயிற்சி வசதி – வினெட்ரா, விசாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டது.

கல்வாரி நீர்மூழ்கி கப்பலில் இருந்து தப்பிக்கும் பயிற்சி வசதி (வினெத்ரா) 13 செப்டம்பர் 24 அன்று விசாகப்பட்டினத்தின் ஐஎன்எஸ் சாதவாகனாவில் கிழக்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி கமாண்டிங் இன் சீஃப் வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கரால் நிறுவப்பட்டது. இந்த வசதி,  கல்வாரி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து குழுவினரின் தப்பிக்கும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும்  இது ‘தற்சார்பு இந்தியா ‘ வுக்கு ஏற்ப உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது பாதுகாப்புத் திறன்களில் தற்சார்பு குறித்த இந்தியாவின் கவனத்தை எடுத்துக்காட்டுகிறது.

இது எல்&டி நிறுவனத்தால்  ஒரு ஆயத்த தயாரிப்பு திட்டமாக கட்டப்பட்டது . கல்வாரி நீர்மூழ்கி தப்பிக்கும் பயிற்சி வசதி அருகிலுள்ள டைவிங் பேசினுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்து மீட்டர் தப்பிக்கும் கோபுரத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த அதிநவீன வசதி கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்களின் குழுவினருக்கு அடிப்படை மற்றும் புத்தாக்க தப்பிக்கும் பயிற்சியை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும்,  ஆபத்தான சூழ்நிலையில் தப்பிக்கும் நடைமுறைகளில் அவர்கள் நிபுணத்துவம் பெற்றிருப்பதை உறுதி செய்யும்.

“பயிற்சியாளர்” என்று பொருள்படும் “வினெட்ரா” வசதி, நீர்மூழ்கி வீரர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியை பிரதிபலிக்கிறது. நீருக்கடியில் எந்தவொரு அவசரநிலை ஏற்பட்டாலும் தப்பிக்க தேவையான திறன்களையும் பயிற்சியையும் அவர்கள் பெற்றிருப்பதை உறுதி செய்கிறது. இந்த பயிற்சி வசதி இந்திய கடற்படையின் செயல்பாட்டு தயார்நிலை, பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் பயிற்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது..

Leave a Reply