தொழிலாளர் சீர்திருத்தங்கள், இ-ஷ்ரம்-தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் தரவுத்தளம் , கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் மத்திய அரசும், மாநிலங்களும்/யூனியன் பிரதேசங்களும் மேற்கொண்டு வரும் முக்கிய முன்முயற்சிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகிய தென் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் பெங்களூருவில் முதல் மண்டல கூட்டத்துடன் தொடங்கிய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்தி வரும் தேசிய அளவிலான தொடர்ச்சியான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பஞ்சாப், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், லடாக் மற்றும் ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் 2- வது பிராந்திய கூட்டம் சண்டிகரில் நடைபெற்றது.
தொழிலாளர் குறியீடுகளின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் உருவாக்கப்பட்ட வரைவு விதிகளை ஒத்திசைத்தல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு பலன்களை எளிதாக அணுகுவதற்காக ‘ஒரே இடத்தில் தீர்வாக’ இ-ஷ்ரம் போர்ட்டலை நிறுவுதல், கட்டிடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பல்வேறு மத்திய நலத்திட்டங்களை விரிவுபடுத்துதல், வேலை வாய்ப்புகளுக்காக கல்வி நிறுவனங்களுடன் இணைப்பு, வேலைவாய்ப்பு அளவீடு, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் , தேசிய வேலைவாய்ப்பு சேவை ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் சேவைகள் மற்றும் வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில்தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா, மத்திய அரசுகள் மற்றும் பங்கேற்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்..
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மேற்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களான மகாராஷ்டிரா, கோவா, குஜராத், டாமன், டையூ, மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் 3- வது பிராந்திய கூட்டத்திற்கு 15.09.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று குஜராத்தின் ராஜ்கோட்டில் தலைமை தாங்குவார்.

திவாஹர்