ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகரில் ரூ.660 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை யநாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமரின் ஊரக வீட்டுவசதித் திட்டப் பயனாளிகள் 32 ஆயிரம் பேருக்கு அனுமதிக் கடிதங்களையும் அவர் வழங்கினார். முன்னதாக, டாடாநகர் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஆறு வந்தே பாரத் ரயில்களை திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பாபா பைத்யநாத், பாபா பாசுகிநாத், பிர்சா முண்டா பூமியின் முன் தலைவணங்கி பிரதமர் தமது உரையைத் தொடங்கினார். இயற்கையை வழிபடுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்மா பர்வ் கொண்டாடப்படும் புனித தருணத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், இன்று ராஞ்சி விமான நிலையத்தில் தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை எடுத்துரைத்தார். அங்கு கர்மா பர்வத்தின் சின்னத்தை ஒரு பெண் அவருக்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார். கர்மா பர்வத்தின் ஒரு பகுதியாக தங்கள் சகோதரர்கள் வளமான வாழ்க்கையை வாழ பெண்கள் விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார். இந்தப் புனித சந்தர்ப்பத்தில் தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், ஜார்க்கண்ட் இன்று ஆறு புதிய வந்தே பாரத் ரயில்கள், ரூ. 600 கோடிக்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்கள், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பாதுகாப்பான வீடுகள் ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்றார். இன்றைய திட்டங்களுக்காக ஜார்க்கண்ட் மக்களுக்கும், வந்தே பாரத் இணைப்பைப் பெற்ற பிற மாநிலங்களுக்கும் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
நவீன வளர்ச்சி ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இருந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் பின்தங்கியிருந்ததை நினைவுகூர்ந்தார். அனைவரும் இணைவோம்- அனைவரும் உயர்வோம்” என்ற தாரக மந்திரம் நாட்டின் சிந்தனையையும், முன்னுரிமைகளையும் சிறப்பாக மாற்றியமைத்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். ஏழைகள், பழங்குடியினர், தலித்துகள், நலிந்தோர், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன் நாட்டின் முன்னுரிமை என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு மாநிலமும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்த வந்தே பாரத் ரயிலை விரும்புகின்றன என்று பிரதமர் கூறினார். சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் வடக்கு, தெற்கு மாநிலங்களுக்கு மூன்று புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களை இன்று கொடியசைத்து தொடங்கியதையும் குறிப்பிட்டார். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் ரயில் இணைப்பின் விரிவாக்கம் இந்தப் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்றும், வர்த்தகர்கள், தொழில் வல்லுநர்கள், மாணவர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டினார். ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களின் விளைவாக கலாச்சார நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுவது குறித்து பேசிய பிரதமர், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் உலகின் பல இடங்களில் இருந்தும் காசிக்கு வருகை தரும் ஏராளமான யாத்ரீகர்கள், வாரணாசி – தியோகர் வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தியோகரில் உள்ள பாபா பைத்யநாத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று குறிப்பிட்டார். இது இப்பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, டாடா நகரின் தொழில் வளர்ச்சியையும் ஊக்குவித்து, அதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார். விரைவான வளர்ச்சிக்கு நவீன ரயில்வே உள்கட்டமைப்பு இன்றியமையாதது என்று கூறிய திரு நரேந்திர மோடி, இன்றைய பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்துப் பேசினார். தியோகர் மாவட்டத்தில் மதுபூர் பை பாஸ் பாதைக்கு அடிக்கல் நாட்டியது குறித்தும் அவர் குறிப்பிட்டார். ய கிரிதிஹ் – ஜசிதிஹ் இடையேயான பயண நேரத்தை குறைக்க இது உதவும் என்றார். ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ஹஸாரிபாக் நகர பயிற்சி மையம் குறித்தும் அவர் குறிப்பிட்டார். குர்குரா-கனரோன் வழித்தடத்தை இரட்டை ரயில் பாதையாக்குவது ஜார்க்கண்டில் ரயில் ரயில் தொடர்பை மேம்படுத்துவதுடன், எஃகு தொழில்களுக்கான போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
திவாஹர்