பிரான்சில் நடைபெற்ற உலகத்திறன்கள் லியான் 2024-ல் இந்தியா ஜொலித்தது: 16 பதக்கங்கள் மற்றும் உயர் சிறப்புத்திறனுக்கான பதக்கங்களை வென்றுள்ளது.

பிரான்சின் லியோனில் நடைபெற்ற உலக திறன்கள் 2024 போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வென்று சர்வதேச அரங்கில் முத்திரை பதித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அஷ்விதா போலிஷ், தீரேந்திரகுமார் காந்தி மற்றும் சத்யஜித் பாலகிருஷ்ணன், ஜோதிர் ஆதித்ய கிருஷ்ணப்பிரியா ரவிகுமார் மற்றும் அமரேஷ்குமார் சாஹூ ஆகியோர் மதிப்புமிக்க 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்கள் முறையே கேக் மற்றும் மிட்டாய் தயாரிப்பு, ஓட்டல் வரவேற்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இந்தப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இது தவிர பல்வேறு பிரிவுகளில், போட்டியாளர்கள் அவர்களது தனித்துவ திறன்கள் மற்றும் சீரான செயல்பாட்டை வெளிப்படுத்தி, உயர் சிறப்புத்திறனுக்கான 12 பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

இந்த வெற்றிக்காக இக்குழுவினருக்கு மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை மற்றும் கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply