அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செப்டம்பர் 17, 2024 அன்று துறையின் பல்வேறு கட்டிடங்களிலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவியுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அனைத்து தன்னாட்சி அமைப்புகள் மற்றும் துணை அலுவலகங்களிலும் தூய்மையே சேவையைத் தொடங்கியது.
தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர், தூய்மையான மற்றும் குப்பையற்ற இந்தியாவுக்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிப்பாட்டை உருவாக்க துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தூய்மை உறுதிமொழியை வழங்கினார். மொத்தம் 395 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.
26 தன்னாட்சி அமைப்புகளில் மொத்தம் 2957 ஊழியர்களும், சார்நிலை அலுவலகங்களில் மொத்தம் 2549 ஊழியர்களும் தூய்மை மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளனர்.
பிரச்சார இலக்குகளுக்கான அர்ப்பணிப்பு மற்றும் பிரச்சாரத்தை பரந்த மற்றும் ஆழமானதாக மாற்றுவதற்கான நோக்கம் உறுதிமொழி எடுப்பதன் மூலம் வலியுறுத்தப்பட்டது.
குழந்தைகளிடையே தூய்மை விழிப்புணர்வை பரப்புவதற்காக, 2024செப்டம்பர் 17-18தேதிகளில் பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு “எனது கனவின் தூய்மையான இந்தியா” என்ற தலைப்பில் ஓவியப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“தூய்மை மற்றும் ஆரோக்கியத்தில் அதன் தாக்கம்” குறித்த விரிவுரை மற்றும் விழிப்புணர்வு அமர்வு 2024 செப்டம்பர் 20முதல்30வரை தொழில்நுட்ப பவனுக்கு அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும்.
டிஎஸ்டியின் துப்புரவு தொழிலாளர்களுக்கு தடுப்பு சுகாதார பரிசோதனை செப்டம்பர் 26, 2024 அன்று நடத்தப்படும் மேலும் டிஎஸ்டியின் 104 துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தூய்மை கருவிகள் வழங்கப்படும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிர்ணயித்துள்ள குறிப்பிட்ட காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய இந்த இயக்கம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
திவாஹர்