தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு ஞானேஷ் குமார் மற்றும் டாக்டர் எஸ் எஸ் சந்து ஆகியோருடன் ராஞ்சியில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தினார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2025 ஜனவரி 5-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது, மேலும், மாநிலத்தில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான (44 பொது; 09 எஸ்சி; 28 எஸ்டி) தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23-24 தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆணையத்தின் இரண்டு நாள் ஆய்வுப் பயணத்தின் போது, ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, ஏஜேஎஸ்யூ கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆணையத்தின் குழுவினரை சந்தித்தனர். 2024 மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக மற்றும் அமைதியாக நடத்தியதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பாராட்டு தெரிவித்தன.
அரசியல் கட்சிகள் எழுப்பிய முக்கிய பிரச்சினைகள் பின்வருமாறு:
தீபாவளி, சாத், துர்கா பூஜை மற்றும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மாநில நிறுவன நாள் போன்ற பல்வேறு பண்டிகைகளை பரிசீலித்து, தேர்தல் நடைமுறையில் பங்கேற்கும் வகையில் அதிகரிப்பதற்கான தேர்தல் அட்டவணையை தயார் செய்வதற்கு முன்பு பெரும்பாலான கட்சிகள் ஒருமனதாக கோரிக்கை விடுத்தன. சாத் பூஜையின் போது மாநிலத்தில் பல வாக்காளர்கள் பயணம் செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பல கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
பிழையற்ற வாக்காளர் பட்டியலை உருவாக்குமாறும், உள்ளூர் சிவில் மற்றும் காவல்துறை நிர்வாகத்தின் சார்பற்ற நடவடிக்கைகளுடன் சுதந்திரமான நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும் என்றும் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
மத்திய ஆயுத காவல் படை மற்றும் மாநில காவல் துறையினர் முறையாக ஒருங்கிணைந்து பதற்றமான மற்றும் ஊரக வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்பட்டு, ஐ.ஜி அளவிலான அதிகாரியின் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100% கண்காணிப்பு வசதி.
வாக்குச்சாவடிகளைப் பொறுத்தவரை, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்தளம் மற்றும் போதுமான விளக்குகள் இருக்க வேண்டும் என்றும், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஒரு கட்சி கோரிக்கை விடுத்தது.
வாக்காளர்களின் வசதிக்காக அனைத்து வாக்குச்சாவடிகளும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே அமைக்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் இருந்து தொலைவில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று திரும்ப போக்குவரத்து வசதி வழங்கப்படலாம். வாக்குச்சாவடிகளில் வசதிகளை உறுதி செய்ய அணுகல் பார்வையாளர் நியமிக்கப்படலாம்.
சில சந்தர்ப்பங்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெவ்வேறு வாக்குச் சாவடிகள் ஒதுக்கப்படுவதாகவும், சில வாக்குச் சாவடிகளில் 1500 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதாகவும் ஒரு கட்சி கவலை தெரிவித்தது.
அதிகாரிகளின் தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்க்க, வாக்குப்பதிவு நாளன்று கட்சிகள் வாக்குச் சாவடிக்கு அருகில் வாக்குச்சாவடி மேசைகளை அமைப்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் பகுதியை வரையறுக்க வேண்டும் என்று சில கட்சிகள் வலியுறுத்தின.
கடந்த தேர்தல்களில் வாக்காளர் பட்டியல் இறுதியாக வெளியிடப்பட்ட பின்னர், சில தொகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்தும் ஒரு கட்சி கவலை எழுப்பியது.
சில சட்டப்பேரவைத் தொகுதிகளில் திடீரென வாக்காளர்கள் அதிகரிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
சில கட்சிகள் பிரச்சாரத்தின் போது வெறுக்கத்தக்க பேச்சு குறித்து கவலைகளை எழுப்பின.
வாக்காளர்களை கவர்வதற்காக கள்ளச்சாராயம், மதுபானம் மற்றும் இலவசங்களை பயன்படுத்துவோர் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் / வேட்பாளர்களின் புகார்களுக்கு ஒத்துழைக்க / நடவடிக்கை எடுப்பதில் நிர்வாகம் மெத்தனமாக உள்ளது மற்றும் அத்தகைய புகார்கள் மீது விரைவான நடவடிக்கை தேவை.
வேட்பாளர்கள் 24 மணி நேரமும் பிரசாரம் செய்வதை கண்காணித்தல் மற்றும் தேர்தல் தினத்தன்று ஐவிஆர்எஸ் மூலம் பிரசாரம் செய்வதை தடை செய்தல்
விழிப்புணர்வுக்காக வாக்காளர் தகவல் சீட்டு முன்கூட்டியே விநியோகிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் கவலைகளை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், மாநிலத்தில் சுதந்திரமான, நியாயமான, பங்கேற்பு, உள்ளடக்கிய, அமைதியான மற்றும் தூண்டுதல் இல்லாத தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் உறுதிபூண்டுள்ளது என்றும் ஆணையம் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தது.
எம்.பிரபாகரன்